தண்ணீரில் விழுந்த செல் பேசியை சரி செய்ய

phone

இன்றைய மிகத் தேவையான பொருட்களில் செல்லிடப் பேசி முதலிடம் வகிக்கின்றது. இதைப் பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த செல்லிடப் பேசியை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.
சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக இரண்டு உதறு உதறி விட்டு உடனே மீண்டும் இயங்கச் செய்து விடுவார்கள். இப்படி செய்யவே கூடாது.
செல்லிடப் பேசியில் இருந்து சிம்கார்ட், மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது கைத் துடைக்கும் தாள் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.

வீட்டைத் தூய்மைப்படுத்தும் மின் கருவியான Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode எனப்படும் உறுஞ்சும் நிலையில் வைத்து, செல்லிடப் பேசியை அதன் முன் காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.Vaccum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம்.
உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் செல்லிடப்பேசியை வைத்து செல்லிடப் பேசி தெரியாதபடி முழுவதுமாக மூடிவிடவும். இதனால் தண்ணீர் முழுமையாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும்.

ஆனால், இதற்கு பொறுமை மிக அவசியம்.குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம். அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். தலை முடியைக் காய வைக்கும் Hairdryer  முயற்சி செய்யலாம்.
செல்லிடப்பேசி நன்றாகக் காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்தி கொண்ட பின் அதை இயங்க செய்ய முயற்சிக்கவும்.பெரும்பாலும் இயங்கத் தொடங்கிவிடும்.இல்லை என்றால் செல்லிடப்பேசி சரியாகிவிட்டது. பேட்டரி பிரச்சினையாக இருக்கும். வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும்.ஆனால் அப்போதும் இயங்கவில்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போகவும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.