நிலவேம்பு மகத்துவம்

1267480

நிலவேம்பு என்பது 2 அடி வரை வளரும் ஒரு செடி வகை. மலை, மண் வளம் உள்ள இடங்களில் எளிதாக வளரும். தாவரவியலில் Andrographis  Paniculata  என்று இந்தச் செடியை அழைக்கிறார்கள்.
நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிலவேம்பு கஷாயம் இந்த செடியிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.  இந்தக் கஷாயத்தை 9 கூட்டுமருந்துகள் கலந்து சித்த மருத்துவர்கள் கொடுப்பார்கள்.
இந்த கஷாயத்தைதான் நிலவேம்பு குடிநீர் என்று சொல்கிறோம்.  கடந்த சில வருடங்களாக விதவிதமான காய்ச்சல்கள் நம் ஊரில் வந்துகொண்டிருப்பது எல்லோருக்கும் தெரியும்.
டெங்கு காய்ச்சல், பறவைக்  காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று புதிய புதிய காய்ச்சல்கள் வரும்போது வழக்கமான மருத்துவ முறைகளால் சமாளிக்க முடியாத சூழ்நிலையை  நிலவேம்பு சாதித்திருக்கிறது.திடீரென பன்றிக் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்த போது நவீன மருத்துவம் இருந்தும் என்ன செய்வது என தெரியாமல் அரசாங்கமே ஸ்தம்பித்துப்  போனது.
ஒரு பக்கம் அதை பற்றிய பயம், மறுபக்கம் அது என்ன காய்ச்சல் என்று தெரியாத நிலை, போதுமான பரிசோதனை நிலையங்கள் இல்லாமல்  மாதிரிகளை எடுத்துக் கொண்டு அலைக்கழிந்த இக்கட்டான நேரத்தில் நிலவேம்பு பெரிய உதவி செய்தது.

மற்ற மாநிலங்களில் காய்ச்சல் பாதிப்பு  அதிகமாக இருந்தபோதும், தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்ததற்கு காரணம் நிலவேம்பு குடிநீர் கொடுத்த பாதுகாப்புதான் என்று  உறுதியாக சொல்லலாம். டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதித்த இக்கட்டான சூழல்களில் நிலவேம்பின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் அரசாங்கமே அதை விளம்பரப்படுத்தி, மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீருக்காக தனிப்பிரிவே தொடங்கியது.

எல்லா சித்த மருந்துக்கடைகளிலும் 9 கூட்டு மருந்துகளுடன் கலக்கப்பட்ட நிலவேம்பு கலவை கிடைக்கும். அரசு மருத்துவமனைகளில் சித்த  மருத்துவப் பிரிவு, தமிழ்நாடு அரசின் டாம்ப்கால், சென்னை அடையாறு பகுதியில் செயல்படும் சித்த மருத்துவர்களின் கூட்டுறவு சங்கம் ஆகிய  இடங்களில் கிடைக்கும். காதிபவன், சித்த மருந்துக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் போன்றவற்றிலும் நிலவேம்பு கிடைக்கிறது.

நிலவேம்பு குடிநீர்  ?

கைப்பிடி அளவு நிலவேம்புப் பொடியை 500 மி.லி. தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, 2 ஏலக்காய், 2 கிராம்பு  போன்றவற்றையும் வாசனைக்காக சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிட வேண்டும். இந்த தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிய பிறகு, வடிகட்டி  சாப்பிடலாம். காய்ச்சல் இருப்பவர்கள் காலை, இரவு என இரண்டு வேளை தலா 60 மி.லி. சாப்பிட்டால் போதும்.
நிலவேம்பு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என்பதால், காய்ச்சல் இல்லாதவர்களும் தடுப்பு மருந்தாக இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டுக் கொள்ளலாம்.
நிலவேம்பின்  கசப்பைப் போக்க கொஞ்சம் சர்க்கரை, வெல்லம், தேன் என ஏதாவது ஒன்றை கலந்து காய்ச்சி தேநீர் போலவும் பயன்படுத்தலாம். தேன் ஒரு சிறந்த  மருந்து என்பதால் தேனுக்கு முன்னுரிமை கொடுப்பது இன்னும் நல்லது. நீரிழிவு உள்ளவர்கள் இனிப்பு சேர்க்காமல் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

மருத்துவ பயன்கள்? 

எந்த விஷக்காய்ச்சலாக (Viral Fever) இருந்தாலும் நிலவேம்பு குடிநீருக்குக் கட்டுப்பட்டுவிடும். காய்ச்சலின் போது உடலில் இருக்கும் வைரஸையும்  முழுமையாக அழித்துவிடுவதால் காய்ச்சலுடன் மூட்டுவலியும் காணாமல் போய் விடும். காய்ச்சல் வந்தவுடன் பலரும் ஆங்கில மருத்துவத்தையே  தேடுவார்கள். உங்கள் திருப்திக்காக ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்ளும்போது நிலவேம்பு குடி நீரையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

நிலவேம்பு குடிநீரால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது. அதனால், 5 நாட்களில் ஆங்கில மருத்துவம் குணப்படுத்துகிறது என்றால், நிலவேம்பு  குடிநீர் சில நாட்களில் குணப்படுத்த உங்களுக்கு உதவி செய்யும். காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வும் சரியாகிவிடும்.

நம் வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவச் செலவுக்கே சரியாகிவிடுகிற இன்றைய சூழலில், மிகக்குறைந்த செலவில் குணப்படுத்தும் சித்த  மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நிலவேம்பு நமக்கு உணர்த்தியிருக்கிறது. இது சித்த மருத்துவம் என்கிற கடலில் ஒரு துளிதான்.
இன்னும்  எத்தனையோ விஷயங்கள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்கின்றன.
மக்களிடம் இப்போது இயற்கை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் நெல்லிக்காய் கலந்த தைலம், மருதாணி கலந்த எண்ணெய், பழங்கள் கலந்த ஃபேஷியல் என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு எபோலா வருவதில்லை .
பனி,  மழைக்கு பயந்து வீட்டிலேயே நம்மால் உட்கார்ந்திருக்க முடியாது. ஆனால், இந்த பருவத்திலும் எங்கள் வீட்டில் யாருக்கும் உடல்நலக் குறைவு  இல்லை என்று சொல்லும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க நிலவேம்பு நமக்கு உதவி செய்யும்

கடலை மாவு அல்லது பயத்தம்மாவு இதில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து சிறிது பால் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு கலந்து சிறிது நீர் விட்டு குழைத்து முகம் மற்றும் கழுத்தில் போட்டு ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து கழுவிவிடுங்கள் முகம் பளிச்சென்று இருக்கும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.