உணவு உண்ணும் முறைகள்

herbal food

சர்க்கரை வியாதி உடையவர்கள் வயிறு நிறையும் அளவில் உண்ணாமல் மூன்று வேளை உணவை நான்கு அல்லது ஐந்து வேளைகளில் உண்ணலாம். தினமும் குறித்த நேரத்தில் உண்ணவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் உண்ணக்கூடாது. உண்ணும்போது பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், படித்துக் கொண்டும் உண்ணக்கூடாது.
பசியில்லாதுபோது கடனே என்று மேலும் மேலும் அடைக்கக்கூடாது அளவிற்கு அதிகமாக உண்டால் நோய் வரும். ஆயுள் குறையும். எனவே வயிறுபுடைக்க மூச்சு முட்ட உண்ணக்கூடாது. அளவிற்கு குறைவாக உண்டாலும் உடலில் சக்தி குறையும்.

உடலுழைப்பு அதிகம் உள்ளவர்கள் அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மன உழைப்பு அதிகம் உள்ளவர்கள் அரிசி உணவை குறைவாகவும், கோதுமை, பால், வெண்ணெய், தேன், பாதாம்பருப்பு,முந்திரி பருப்பு, தக்காளி சாறு, ஆப்பிள், திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, பசலைக்கீரை, புடலங்காய், பாகற்காய் ஆகிய ஊட்டச்சத்துக்களையும், புதிய காய்கறிகளையும் உண்ண வேண்டும்.

எப்படி அதிக உணவு சோம்பலை ஏற்படுத்தி உடலுக்கு நோயை கொடுக்கிறதோ, அதுபோல் தேவைக்கு குறைந்த உணவு உண்டாலும் சோர்வைக் கொடுக்கும் வயிற்றில் பாதியளவு உணவு, கால்பகுதி தண்ணீர், அடுத்த கால்பகுதி காற்றின் சஞ்சாரத்திற்கு ஏற்றபடி கொள்ளும் உணவே மித உணவு.வயது முதிர்ந்தபோது பாதியளவு உண்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமர்ந்து உண்ணக்கூடாது. சாப்பிடும்போது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து அமர்ந்து உண்ணக்கூடாது.

அதிக கவலை, துக்கம், கோபம் ஆகியவற்றுடன் உண்ணக்கூடாது. அதிகமான உணவு உண்பதால் இரைப்பையின் உறுதித்தன்மை குறைந்து தொப்பை உண்டாகிறது. உணவில் உப்பு, புளி, மிளகாய் அதிகம் சேர்க்க கூடாது. வெயில் காலத்தில், மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண்கள் ஆறிவிடும்.அகத்திக்கீரை நுரையீரலைக் காக்கிறது. இது வயிற்று புண்ணுக்கு நல்லது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதை சாப்பிடுவது மிக நல்லது. முருங்கைக்கீரை,சர்க்கரை வியாதிக்கு நல்லது. இதில் இரும்புச் சத்து, வைட்டமின் அதிகம் உள்ளது.

பசலக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீர் நன்கு கழியும். கர்ப்பிணி பெண்களுக்கு இது நல்லது. இதனால் சுகப்பிரசவம் ஏற்படும் நின்று கொண்டு சாப்பிட்டால் பித்தக்கற்கள் உண்டாகும். எனவே உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும் மருந்துகள் சாப்பிடும்போது அகத்தீக்கீரை,பாக்ற்காய் ஆகியவற்றை உணவில் சேர்க்கக்கூடாது.அது மருந்தினை முறித்துவிடும். முட்டையின் மஞ்சள் கருவில் சுமார் 300 மி.கி கொலஸ்டிரால் உள்ளதால் இது இருதயத்திற்கு கெடுதலை கொடுக்கும். ஒவ்வொரு நாளும் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் பருக வேண்டும். சாப்பிட்ட உடன் உட்கார்ந்திருந்தால் வயிறு பெருக்கும்.சாப்பிட்ட உடன் நடந்தால் ஆயுள் வளரும். சாப்பிட்ட உடன் தூங்கினால் உடல் பெருக்கும். சாப்பிட்டபின் தண்ணீரில் பலதடவை வாய் கொப்பளிக்க வேண்டும்

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.