மூளைக்கு கெடுதல் தரும் செயல்கள்

Unhappy Depressed Woman

 

மூளை சரியாக இருந்தால்தான் எல்லாம் சாியாக வரும் ஆனால் மூளை சாியாக இல்லையெனில் எந்தச் செயல்களும் சாியாக வராது. கோபம், ஆற்றாமை, பொறாமை மற்றும் தலைவலி இவைகள்தான் மூளை சாியில்லை என்றால் ஏற்படக்கூடியது.

புகைப்பிடித்தல்
புகைப்பிடிப்பதால், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மூளையில் உள்ள சுருக்கங்கள் அதிகரிப்பதோடு, அல்சீமியர் நோயை உண்டாக்கும்.
உணவை தவிர்த்தல்
சிலர் காலை வேளையில் உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அவ்வாறு உணவுகளை தவிர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது குறையும். இதனால் மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், மூளையின் செயல்பாடானது தடைபட ஆரம்பிக்கும்.
அதிகமாக சாப்பிடுவது
உணவுகள் உடலுக்கு எப்படி ஆரோக்கியத்தை தருமோ, அதே சமயம் தீங்கையும் விளைவிக்கும், அவை அனைத்தும் உணவை உண்ணும் அளவிலேயே உள்ளது. ஆம், உணவை அளவாக உண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டால், பின் மூளைத் தமனிகளை கடினமடையச் செய்து, ஞாபக சக்தியை குறைத்துவிடும்.
அதிகப்படியான சர்க்கரை
அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், பின் உடலில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் உடலில் உறிஞ்சாமல், உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கி, மூளை வளர்ச்சியை தடை செய்யும்.
காற்று மாசுபாடு
உடலில் ஆக்ஸிஜனை அதிகம் உறிஞ்சுவது மூளை தான். ஆகவே மாசடைந்த காற்றை அதிகம் சுவாசித்தால், அது நேரடியாக இதயத்திற்கு செல்கிறதோ இல்லையோ அது மூளைக்கு தான் முதலில் செல்லும். இதனால் மாசுபட்ட காற்றினை சுவாசிப்பதால், மூளையின் செயல்திறனானது குறைந்துவிடும்.
தூக்கமின்மை
நல்ல தூக்கம் இல்லாவிட்டால், நாள் முழுவதும் ஓய்வின்றி செயல்படும் மூளையானது சோர்ந்து, போதிய ஓய்வில்லாததால் மூளையில் உள்ள செல்கள் இறக்க நேரிடும். மேலும் தூங்கும் போது முகத்தை போர்வையால் போர்த்திக் கொண்டு தூங்கக் கூடாது. ஏனெனில் பின் மூளைக்கு வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், மூளையானது பாதிக்கப்படும்.
குறைவாக பேசுவது
அதிகமாக பேசுவதன் மூலம் மூளையின் செயல்திறனை மேம்படுத்த முடியும்.  தேவையற்ற பேச்சுக்களை அறவே நீக்குவது மிகவும் நல்லது ஒரு சொல் நன்றாக இருக்கவேண்டும் யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.  இதுதான் முக்கியம்….

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.