டீன் ஏஜ்-பற்றி கருத்துகள்

teen boys

பொதுவாக டீன் ஏஜ் களிடம் அதிக கனவு எதைப்பற்றியும் கவலைப்படாத எதைச் செய்தாலும் அதன் விளைவினைப்பற்றி யோசிக்காத வயது. அந்த எட்டு வருடத்தில் (12-20) வாழ்க்கையில் வண்ணமயமானது.  அது வெறும் பிளாக் அன்ட் வொயிட்டாக மாறுவதற்கும் வழிகோலும் அதனால் கவனமாக பெற்றோர் தான் அவற்றைக் கையாள வேண்டும்.

டேட்டிங், ரொமான்ஸ், நைட் பார்ட்டி போன்ற அனைத்தும் இளைஞர்களுடன் தொடர்புடையது. எனவே எந்த ஒரு இளைஞனைப் பார்த்தாலும், அனைவரின் மனதிலும் தோன்றுவது, அவர்களுக்கு நிச்சயம் காதல் இருக்கும் அல்லது பாலியல் எண்ணம் அதிகம் இருக்கும் என்பது பற்றிய கெட்டதான சிந்தனை மனதில் ஏற்பட வழிவகுக்கிறது. இதற்கு காரணம் சமுதாயமும், சூழ்நிலையும் தான்.

டீன் ஏஜ் வயதுள்ளவர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்ற கருத்து இருக்கிறது. சரி தான், அவர்களால் ஏதாவது ஒரு கடினமான சூழ்நிலை வந்தால், அதனை சரியாக சமாளிக்கத் தெரியாது. இதற்கு அவர்களது மன வளர்ச்சியும், சூழ்நிலையும் தான் காரணமே தவிர, அவர்களது தவறில்லை.

பெரும்பாலானோரின் மனதில், டீன்-ஏஜ் வயதா? அப்படியெனில் அவர்களுக்கு ஆணவம் அதிகம் இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். உண்மையில், இது அவர்களது தவறல்ல. உடலில் உள்ள ஹார்மோன்களின் மாற்றங்களும், ஒருசில சூழ்நிலைகளும் தான் அவர்களது நடவடிக்கைகளை வித்தியாசமாக்குகிறது.

டீன்-ஏஜ் வயது தான், முதன்முதலில் மனதில் இருக்கும் கருத்தையோ அல்லது செயல்களையோ வெளிப்படுத்தும் வாழ்வின் முதல் நிலை. இந்த நிலையில் அவர்கள் வெளியுலகத்தைப் பற்றி நிறைய ஆராய்வார்கள். அப்போது அவர்களுக்கு எதற்கும் ஒரு கட்டுப்பாடு உள்ளது என்பதை புரிந்து கொள்ளும் சக்தி இருக்காது. அதனால் கட்டுப்பாடின்றி நடந்து கொள்வார்கள். ஆகவே இத்தகைய அறிவை பெற்றோர்கள் தான் சிறுவயதிலிருநந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தையாக இருந்து, வளரும் போது ஒவ்வொருவரின் நடையிலும், உடையிலும் , பாவனையிலும் மாற்றங்கள் நிகழ்வது சகஜம் தான். அப்போது அவர்களுக்கு, இந்த உலகிலேயே மிகவும் ஸ்மார்ட் நான் தான் என்று உணர்வார்கள். அதனால் அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் துணிந்து செய்வார்கள். ஏன், இந்த நிலையில் தவறான வழியில் கூட செல்ல வாய்ப்புள்ளது. ஆகவே இதனை பெற்றோர்கள் சரியாக கண்டு கொள்ளாமலும், கவனிக்காமலும் ஆதரித்தால் , பின் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இவையே மக்கள் மத்தியில் டீன்-ஏஜ் வயதுள்ளவர்கள் பற்றிய எண்ணங்கள். என்ன சரிதானா?

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.