புதிய கோள் பூமியைப் போன்றுள்ளது.

Kepler-452b_and_Earth_Size

 சமீபத்தில் பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடிப்பில் நாசா வெளியிட்ட தகவல் இப்புதிய கோளுக்கு கெப்ளர் 452பி என பெயரிடப் பட்டுள்ளது.சூரியக் குடும்பத்திற்கு வெளியே பூமியைப் போன்று வேறு கோள்கள் இருக்கின்றனவா என்பது குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இது தொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் சக்தி வாய்ந்த கெப்ளர் தொலைநோக்கி விண்கலத்தை நாசா விண்ணில் ஏவியது.இந்த விண்கலமானது தற்போது பூமியை ஒத்த புதிய கோள் ஒன்றைக் கண்டறிந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய கோளிற்கு கெப்ளர் 452 பி என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இந்தப் புதிய கோள் சூரியக் குடும்பத்துக்கு வெளியே பூமியில் இருந்து சுமார் 1400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இந்தக் கோளில் பூமியில் உள்ள தட்பவெப்ப நிலையை ஒத்த தட்பவெப்பம் உள்ளதாக டெல்லியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த கோளில் பாறைகள் அதிகம் இருக்கிறதாம்.

மேலும், இந்தப் புதிய கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை காணப்படுவதாகவும், அங்கு தண்ணீர் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கோளானது பூமியை விட சுமார் 60 சதவீதம் பெரிய அளவில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.