பாதரசத்தால் பாதிப்பு-கொடைக்காணல்

kodaikanal thermo meter

கொடைக்கானலில் செயல்படாமல் உள்ள பாதரச தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுாிந்த 250 தொழிலாளர்களுக்கும் மேல உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் பணிபுாிந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் பாதரசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இதே நிலைமைகள் ஏற்பட்டு மனவளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர்.

1984-ஆம் ஆண்டு தொடங்கிய அந்த ஆலை சுற்றுச்சுழல் மாசு காரணமாக அங்கே 2001 -ல் மூடபட்டது ஆனால் அதன் கழிவுகள் அங்கே முறையாக அகற்றப்படவில்லை அது மெதுவாக ஆலையை விட்டு வந்த நீாில் மற்றும் காற்றில் கலந்து மக்களுக்கு கஷ்டத்தை கொடுக்கின்றது என அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். இந்த நிலை கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் என்பது அவா்களைப்பார்த்தால்தான் தொியும்.உதிர்ந்துவிட்ட பற்கள் , உடம்பெல்லாம் புண்கள், உச்சி முதல் பாதம் வரை எரிச்சல், ஞாபக மறதி என பல்வேறு உடல் உபாதிகளுக்கு ஆளாகி உள்ளனர்.
பாதரச ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும், பெண் தொழிலாளர்கள் மட்டுமின்றி ஆண் தொழிலாளர்களின் மனைவிகளும் கர்ப்பபை கோளாறு, கர்ப்பபை கட்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பிறந்த குழந்தை பலர் மனநலம் குன்றியவர்களாக வலம் வருவது சோகத்தின் உச்சம். மக்களுக்காகவே ஆலைகள் கொண்டுவருவதாக கூறும் மத்திய,மாநில அரசுகள் மற்ற நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட  கெடுதல் விளைவிக்கும் ரசாயன ஆலைகளை எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் இந்தியாவில் ஆரம்பிக்க அனுமதி வழங்கி விடுகிறார்கள்.

இந்த தொழிற்சாலைக்கழிவை சாியாக அகற்றி சுத்தம் செய்யாவிட்டால் கொடைக்கானல் மாசுபட்டு கல்பாக்கம் போல் மாறுவது உறுதி. பிறகு சுற்றுலாத்துறையும் இதனால் பாதிக்கப்படும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.