ஒரு கோடிக்கு மேல் விற்றுத்தீர்ந்தது சாம்சங் கேலக்ஸி மொபைல்.

samasung galaxy
கொரியா நாட்டைச்  சேர்ந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் தன் காலக்ஸி சாதனங்களை ஒருகோடிக்கும் மேலாக விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், முதல் காலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானது.
தொடர்ந்து  Galaxy S2, Galaxy S3 ,  Galaxy Note,  Galaxy Note2 மற்றும் Galaxy Y ஆகியவை இந்த வரிசையில் வெளியிடப்பட்டன.
இந்த மாடல்கள் எவ்வளவு விற்பனை செய்யப்பட்டன  என்ற தகவலை சாம்சங் இந்தியா வெளியிடவில்லை.  Galaxy Y, Galaxy Note,  மற்றும் Galaxy S3 ஆகியவை இந்த விற்பனையில் ஐம்பது சதவீதம்  பங்கினைக் கொண்டிருந்தன.
 இதுவரை 14 க்கும் மேற்பட்ட  மாடல்களை Galaxy வரிசையில் சாம்சங் வெளியிட்டுள்ளது. இவற்றின் விலை ரூ.6,790 முதல் ரூ.40,000வரையில் உள்ளன.

 

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.