பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட்

cricket

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பி. சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 393 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 306 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 87 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ரகானே சதத்தால் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா 412 ரன்னகள் முன்னிலை பெற்றது.

இதனால் இலங்கை அணிக்கு 413 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி பெரிய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. 2 விக்கெட்டையும் அஸ்வின்தான் வீசினார்.
இலங்கை கைவசம் இன்னும் 8 விக்கெட்டுகள் உள்ளன. குறைந்தது 90 ஓவரகள் விளையாடி 341 ரன்கள் எடுக்க வேண்டும். தற்போது மேத்யூஸ் 23 ரன்னுடனும், கருணாரத்னே 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாகத்தான் உள்ளது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும் எனத் தெரிகிறது.

ஆனால், நாளைய ஆட்டத்தின்போது மதிய உணவு இடைவேளைக்கு முன் இந்த விக்கெட்டை பிரித்து விட்டால் இந்தியா பக்கம் போட்டி திரும்ப வாய்ப்புள்ளது. தற்போது முடிந்துள்ள நான்கு நாட்களிலும் 10 விக்கெட்டுகள் விழவில்லை. இதனால் இந்தியா மீதமுள்ள 8 விக்கெட்டையும் வீழ்த்த கடினமாக போராட வேண்டும்.சங்ககராவின் கடைசி போட்டி என்பதால் இதில் தோற்கக்கூடாது என்று இலங்கையும், இந்த டெஸ்டை வென்று தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று இந்தியாவும் நினைக்கும். இதனால் நாளைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.