புதிய ஆன்ட்ராய்டு ஓ.எஸ்-ஐ வெளியிடுகிறது மைக்ரோமேக்ஸ்

os

ஜியோமி, மைக்ரோசாப்ட், ஆப்பிள் நிறுவனங்களை போல தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் சொந்தமாக இயங்குதளம் ஒன்றை வடிவமைக்க களமிறங்கியிருக்கிறது. இந்த இயங்குதளமானது மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள், டேப்லட்டுகள், டிவிக்கள் ஆகிய கருவிகளில் இயங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகிறது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் 2-வது இடத்தில் இருக்கும் மைக்ரோமேக்ஸ் 2015 நிதியாண்டில் மட்டும் ரூ.11 ஆயிரம் கோடி வருமாயை ஈட்டியுள்ளது. மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 3-ல் ஒரு பங்கு சந்தையை கொண்டுள்ளது. இந்நிலையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய டெக்னாலஜி ஹெட்டாக பதவியேற்றுள்ள ஆஷிஷ் அகர்வால், கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை தழுவி புதிய ஓ.எஸ். ஒன்று விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்த புதிய இயங்குதளத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

பல முன்னணி மென்பொருள் நிறுவனங்களுடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திற்கு பார்ட்னர்ஷிப் உள்ள நிலையில், முற்றிலும் புதிதாக ஓ.எஸ் ஒன்றை மீண்டும் கொண்டு வருவதில் அதிக ஆர்வம் காட்ட விருப்பமில்லை. எனவே, தன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய பிரத்யேக வசதிகளுடன் ஆன்ட்ராய்டு மென்பொருளை தழுவி இயங்குதளத்தை வெளியிடுகிறது.

பெங்களூருவில் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட குழு முயற்சித்து வருகிறது. பீஜிங்கில் உள்ள நோக்கியா ஆராய்ச்சி பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பேர் கொண்ட குழு இந்த புதிய இயங்குதளத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.