சென்னை உருவான வரலாறு

oldmadras3

வெளிநாடுகளில் இருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும் இந்தியாவிற்குள் வரும் முக்கிய கடற்கரையாக சென்னை கடற்கரை விளங்கியது. இதனால் இங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்காக , 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி, கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் என்ற சகோதர்களிடம் இருந்து நிலம் வாங்கினர்.  தங்களுக்கு நிலம் அளித்த சகோதரர்களின் தந்தையான சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாக, செயிண்ட் ஜார்ஜ் கோர்ட்டையை சுற்றிய பகுதிக்கு சென்னப்பட்டினம் என பெயரிட்டு அழைக்கப்பட்டது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டி முடித்ததும் சென்னை நகரம் மெல்ல மெல்ல வளர துவங்கியது.


முதல் நகராட்சி :

 

1688ம் ஆண்டு சென்னப்பட்டினம் முதல் நகராட்சியாக இரண்டாம் ஜேம்ஸ் என்ற போர்ச்சுகீசிய மன்னனால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னப்பட்டினம் பெற்றது. ஆங்கில தளபதி ராபர்ட் கிளைவின் படை தளமாக இருந்த இப்பகுதி, பிரிட்டிஷ் அரசின் இந்திய குடியிருப்பு பகுதிகளில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றாக, சென்னை மாகாணம் என பெயரிடப்பட்டது. 1947 ம் ஆண்டு இந்திய விடுதலைக்கு பின் மதராஸ், மாகாணத்தின் தலைநகரானது. 1969ல் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது. பின் 1996ல் மதராஸ் நகரம், சென்னை என மாற்றப்பட்டது.

சென்னையின் சிறப்புக்கள் :

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெரும் வளர்ச்சி கண்ட சென்னை நகரம், பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் சில…

இந்தியாவின் 4வது பெரிய நகரம்.

உலகின் 35 பெரிய மெட்ரோ நகரங்களில் இதுவும் ஒன்று.

தென்னிந்தியாவின் வாசலாக திகழ்கிறது.

உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரீனா இங்குள்ளது.

மாவீரர் சத்ரபதி சிவாஜியும், மகாகவி பாரதியும் வந்து வழிபட்ட அன்னை காளிகாம்பாள் கோயில் சென்னை நகரின் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது.

நாட்டின் வாகன மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியில் 35 சதவீதம் சென்னையை அடிப்படையாக கொண்டுள்ளன.

தகவல் தொழில்நுட்ப துறையில் நாட்டிலேயே 2 வது இடத்தில் சென்னை உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக சென்னை விளங்குகிறது.

வாகன உற்பத்தியில் முதலிடம்.

இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜூன் இங்கு தயாரிக்கப்படுகிறது.

 

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.