உலகச் சாம்பியன்ஷிப் தடகளம்: 5000 மீ. மாரத்தானில் எரித்திரியா வீரர் தங்கம் வென்றார்

download (3)

பீஜிங், ஆக. 22-

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் உலகச் சாம்பியன்ஷிப் தடகள போட்டி இன்று தொடங்கியது. இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை போட்டி நடைபெறுகிறது.

இன்றைய தொடக்க நாளில் ஆண்களுக்கான 5000 மீட்டர் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் எரித்திரியா வீரர் பந்தய தூரத்தை இரண்டு மணி நேரம் 12 நிமிடம் 28 வினாடிகளில் கடந்து முதல் இடத்தைப் பிடித்தார்.

எத்தியோப்பிய வீரர் யெமனே செகாய் இரண்டு மணி நேரம் 13 நிமிடம் 08 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

உகாண்டா வீரர் முன்யோ சாலமோன் முதாய் இரண்டு மணி நேரம் 13 நிமிடம் 30 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.

இத்தாலி வீரர் 4-வது இடத்தையும், பஹ்ரைன் வீரர் ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.

அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இது முன்னோட்டமாக இருக்கும் என்பதால் வீரர்கள் இதில் அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.