10 பைசா செலவில்லாமல் மினரல் வாட்டர் வேணுமா?

sempu

மினரல் வாட்டர், பியூரிஃபைட் வாட்டர் என்று பணத்தைத் வாட்டராக செலவு செய்யும் காலம் இது.ஆனால், ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், தூய்மையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும்.மாசம் பலநூறு ரூபாய் மிச்சமாகும்” என்கிறார் இந்திரகுமார். இவரே இதை பரிசோதித்தும் பார்த்துவிட்டார். மைசூரில் இருக்கும் அஜய் குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வைத்து ஒரு ஆய்வு நடத்தினாங்க.

அதன் முடிவில், ‘செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் தீங்கு தரும் கிருமிகள் எதுவும் அந்த நீரில் இல்லைனு அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கிறோம். எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது,செம்பு குடம் இல்லாவிட்டால், சிறிய செப்பு தகடை குடத்திற்குள்ளே போட்டு வெத்தாலும் தண்ணி சுத்தமானதாக மாறிவிடும்.மூன்று நாளைக்கு ஒரு தடவை செம்பு தகடை எடுத்து பாருங்க. கொஞ்சம் பாசி பிடித்து இருக்கும். இது தான் கெட்ட பாக்டீரியாக்கள். இப்போது செம்பு தகடை நன்றாக கழுவிவிட்டு மீண்டும் குடத்திற்குள்ளேயே போட்டு வைக்கவும். முடிஞ்சுது வேலை. ஒரே நாளில் சுத்தமான மினரல் வாட்டர் ரெடி!

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.