இடையில் நிற்காத ரயில்; ஆனால் பயணிகள் ஏறி இறங்க வசதி

download (4)

சீனாவில் புல்லட் ரயிலை, புதிய தொழில் நுட்பத்துடன் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பீஜிங்கில் புறப்படும் இந்த ரயில் குவாங்ஜோவா நகரைச் சென்றடையும் வரை இடைவழியில் உள்ள எந்த ரயில் நிலையத்திலும் நிற்காது; ஆனால் இடைவழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லும். இடைவழியில் உள்ள ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு பின்னர் புறப்பட்டுச் செல்வதென்றால் ஏற்படும் காலதாமதத்தை இந்த புதிய தொழில் நுட்பம் தவிர்க்கிறது. விரைவாக செல்லும் ரயிலிலிருந்து எப்படி ஏறி இறங்குவது? இந்த புதிய தொழில் நுட்பம் எப்படி செயல்படுகிறது?

தயார் நிலையில் பெட்டி:

இந்த ரயில் புறப்பட்டு வேகமாக வந்து கொண்டிருக்கும்போது அடுத்த ரயில் நிலையத்தில் நிற்காது; ஆனால் சற்று வேகத்தைக் குறைத்துக் கொள்ளும். அந்த ரயில் நிலையத்தில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் பயணிகள் ஏறி தயாராக இருப்பர். ரயில், இந்த ரயில் நிலையத்தை அடைந்ததும், ஏற்கனவே உள்ள பயணிகள் பெட்டியை, தன் முன் பகுதி மேல்புறத்தில் கவ்விக் கொண்டு தொடர்ந்து பயணிக்கும். அடுத்த ரயில் நிலையம் வரும்முன் இந்த பெட்டியில் உள்ள பயணிகள் கீழே ரயிலுக்கு மாறி விடுவர். உடனே இந்த பெட்டி ரயிலின் பின்புறத்துக்கு நகர்ந்து விடும். அடுத்த ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் அந்த பெட்டிக்குள் ஏறி விடுவர். அடுத்த ரயில் நிலையம் வந்ததும் இந்த பெட்டி அங்கேயே கழற்றி விடப்படும். அதற்குப் பதில் அங்கிருந்து ஏற்கனவே பயணிகள் ஏறி தயாராக உள்ள பெட்டியை தன் முன் பகுதி மேல்புறத்தில் ஏந்தியவாறு ரயில் சென்று விடும். ரயில் சென்றதும், கழற்றி விடப்பட்ட பெட்டியில் உள்ள பயணிகள் கீழே இறங்கி கொள்ளலாம்.

நேரம் மிச்சம்:

இந்த புதிய தொழில் நுட்பத்தால் ரயில் பயண நேரம் மிச்சமாகிறது. எப்படி என்றால், இடைவழியில் 30 ரயில் நிலயைங்கள் இருப்பதாக எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு ரயில் நிலைத்திலும் ரயில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க தலா குறைந்தது 5 நிமிடமாவது ஆகும். இந்த புதிய தொழில் நுட்பத்தின்படி 2 மணி நேரம் 30 நிமிடம் ரயில் பயணம் மிச்சமாகிறது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.