ராஜ் தாக்கரேவின் மனைவியை நாய் கடித்தது எதனால்?

dogs with raj dhakkare

மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் மனைவி ஷர்மிளாவை கிரேட் டேன் நாய் என்ன காரணத்திற்காக கடித்திருக்கும் என்பது பற்றி மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கும், அவரது மனைவி ஷர்மிளாவுக்கும் நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் அவர்கள் மும்பை தாதார் பகுதியில் உள்ள தங்கள் வீட்டில் இரண்டு கிரேட் டேன் வகை நாய்களை வளர்த்து வருகிறார்கள். ஒரு நாயின் பெயர் ஜேம்ஸ், மற்றொன்றின் பெயர் பாண்ட். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பாண்ட் ஷர்மிளாவின் முகத்தில் கடித்துவிட்டது. உடனே இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 65 தையல் போடப்பட்டது. பின்னர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், பாண்ட் ஷர்மிளாவை கடித்ததற்கு பல காரணம் இருக்கலாம். இனபெருக்கம் செய்யவிடாமல் தடுத்தால் நாய்கள் கோபம் அடையும். உரிமையாளர்கள் வேறு யாரிடமாவது அதிக பாசம் காண்பித்தால் நாய்கள் பொறாமைப்படும். இந்த காரணங்களால் நாய்கள் ஒருவரை தாக்கும் என்றார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.