உலகின் அதிக வயதான நபராக ஜப்பானை சேர்ந்த யாசுட்டாரோ கொய்டேவை அங்கீகரித்த கின்னஸ்

112
டோக்கியோ, ஆக. 21-

உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் நிறுவனம் உலகில் வாழும் மிக அதிகமான ஆணாக ஜப்பனைச் சேர்ந்த 112 வயது யாசுட்டாரோ கொய்டேவை அங்கீகரித்துள்ளது.

மத்திய ஜப்பானில் உள்ள நகோயா நகரில் வாழும் கொய்டேவின் பிறப்புச் சான்றிதழில் இவரது பிறந்த தேதி 13-3-1903 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் வாழ்ந்துவந்த சகாரி மோமோய்(112) என்பவர் இதுவரை உலகின் அதிக வயதான ஆணாக கருதப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் அவர் மரணம் அடைந்தார்.

இதையடுத்து, உலகில் வாழும் மிக அதிக வயதான ஆண் என்ற கவுரவம் யாசுட்டோரோ கொய்டேவுக்கு கிடைத்துள்ளது. வெறும் ரொட்டியை மட்டுமே விரும்பி சாப்பிடுவதாக கூறும் கொய்டே, கண்ணாடி அணியாமல் செய்தித்தாள்களை வாசிப்பதாகவும், நல்ல ஆரோக்கியத்துடன் தனது சுயத்தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்வதாகவும் பெருமையுடன் கூறுகிறார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.