அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் 15 வயது சிறுவன் போட்டி

DeezNutsTV_0

வாஷிங்டன், ஆக. 21–

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2016) அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் என்ற கோடீசுவரர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுக்கு போட்டியாக 15 வயது சிறுவன் சுயேட்சையாக போட்டியிடுகிறான். அவனது பெயர் டீஷ் நட்ஸ். இவன் லோவா மாகாணத்தை சேர்ந்தவன். இவன் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தில் தனது பெயரை பதிவு செய்து இருக்கிறான்.

அமெரிக்காவின் தேசிய கொள்கைப்படி பொதுமக்களிடம் வாக்கெடுப்பு சர்வே நடத்தப்பட்டது. அதில் நட்சுக்கு வடக்கு கரோலினாவில் 9 சதவீதமும், மின்னெ சோடாவில் 8 சதவீதமும், லோவாவில் 7 சதவீதமும் வாக்கு கிடைத்துள்ளது.

அதன்படி கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் தகுதியை இவன் பெற்றுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.