2 கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க நாய்

dog

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் செல்ல நாய் 2 கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் ரோதகருக்கு சொந்தமானது ஸ்வீட் பீ என்ற நாய், ஆஸ்திரேலியாவின் ஷெப்பர்டு மற்றும் பார்டர் கொல்லி கலப்பினத்தைச் சேர்ந்தது.

அபார திறமை கொண்ட இது, தனது தலையின் மீது ஒரு குவளையை வைத்துக்கொண்டு 100 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்கள் 55 விநாடிகளில் கடந்தது. இதன்மூலம் குவளையை தலையில் ஏந்தியபடி வேகமாக சென்ற நாய் என கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துள்லது.

மேலும் தலையில் தண்ணீர் டம்ளரை வைத்துக்கொண்டு 10 காலடி எடுத்து வைத்து சாதனை படைத்துள்ளது இந்த ஸ்வீட் பீ. இதன்மூலம் தண்ணீர் டம்ளரை தலையில் வைத்துக்கொண்டு அதிக காலடி எடுத்துவைத்த நாய் என்றும் கின்னஸ் அமைப்பு ஸ்வீட் பீயை அங்கீகரித்துள்ளது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.