தடை நீங்குகிறது: மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் சல்மான் பட், மொகமது ஆமீர், ஆசிப்

Mohammad-Amir-1_2517153f

சூதாட்டம் தொடர்பாக சிறைத் தண்டனையும் பிறகு தடையும் விதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்களான மொகமது ஆமீர், மொகமது ஆசிப், சல்மான் பட் ஆகியோர் செப்டம்பர் 2-ம் தேதி முதல் அனைத்து கிரிக்கெட்டிலும் விளையாடலாம்.

இவர்கள் மீதான ஐசிசி தடை செப்டம்பர் 1-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. 2010-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரின் போது இம்முவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தீவிர விசாரணையில் இங்கிலாந்தில் இவர்கள் சிறைத் தண்டனை பெற்றனர். இதனையடுத்து ஐசிசி, சல்மான் பட், ஆமீர், ஆசிப் ஆகியோருக்கு தடை விதித்தது.

இந்தத் தடை செப்டம்பர் 1-ம் தேதி முடிவடைகிறது, இதனையடுத்து இவர்கள் மூவரும் செப்டம்பர் 2 முதல் சர்வதேச கிரிக்கெட் உட்பட அனைத்து கிரிக்கெட்டிலும் விளையாடத் தடையில்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து சல்மான் பட் கூறும் போது, “நான் நிறைய கஷ்டப்பட்டு விட்டேன், இப்போது நான் ஒரு மாறிய மனிதன். நடந்தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டேன். இனி நல்லுணர்வுடன் கிரிக்கெட் ஆட்டத்தை ஆடுவேன்” என்று ஈ.எஸ்.பி.என். இணையதளத்துக்கு சல்மான் பட் கூறினார்.

தொடக்கத்தில் லாகூர் புளூஸ் அணிக்கு உள்நாட்டு டி20 போட்டிகளில் பட் விளையாடுகிறார்.

2010- லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது ஸ்பாட் பிக்சிங் செய்து இம்முவரும் அகப்பட்டுக் கொண்டனர், லண்டன் கோர்ட் 3 வீரர்கள் மற்றும் சூதாட்ட தரகர் மஸர் மஜீத் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்தது. பேசி வைத்துக் கொண்டு 2 நோபால்களை ஆமீர் வீச, ஆசிப் 1 நோ-பால் வீசினார். ஆமீரும் மஜீத்தும் குற்றத்தை ஒப்புக் கொள்ள ஆசிப்பும், பட்டும் மறுத்தனர். பட்டிற்கு 2 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ஆமீருக்கு 6 மாதஙகளும் ஆசிப்புக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐசிசி தடை செப்டம்பர் 1-ம் தேதி முடிவடைவதால் இவர்கள் மூவரும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.