புதிய வசதி செய்யும் ‘கூகுள் மேப்ஸ்’

googlemaps

இணையத்தில் ராஜ்ஜியம் நடத்தும் கூகுளின் பல்வேறு சேவைகளுள் ‘கூகுள் மேப்ஸ்’ (Google Maps)   சேவையும் பிரபலமாக உள்ளது.

இந்தச் சேவையை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான அப்ளிகேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்நிலையில், குறிப்பிட்ட அப்ளிகேஷனில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களைச் செய்துவரும் கூகுள் நிறுவனம், தற்போது ‘நைட் மோடு’ (Night Mode)   எனும் புதிய வசதியை உட்புகுத்தியுள்ளது.

முதன்முறையாக    iOS சாதனங்களுக்கான அப்ளிகேஷனில் இந்த வசதி தரப்பட்டுள்ளது.

இவ்வசதியானது இரவு நேரங்களில் எளிதான முறையிலும், துல்லியமாகவும் ‘கூகுள் மேப்ஸ்’ சேவையைப் பயன்படுத்துவதற்கு உதவுகிறது.

இவை தவிர இடங்களைப் பெயரிடுதல், தேடல்களுக்கான ஆலோசனைகள், போஸ்ட் செய்யப்பட்ட புகைப்படங்களுக்கான தலைப்புகளை ‘எடிட்’ செய்தல் போன்றவற்றுடன் மேலும் சில தவறுகள் நீக்கப்பட்டதாக இப்புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.