உலகில் இல்லாத அதிசயம் – 17 கி.மீ உயரத்தில் ராக்கெட் ஏவு தளம்

433

டொரண்டோ: உலகின் உயர்ந்த ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் முயற்சியில் கனடா நாட்டின் நிறுவனம் ஒன்று இறங்கியுள்ளது.

அமெரிக்காவின் காப்புரிமையோடு ஒன்டாரியாவை சேர்ந்த தோத் டெக்னாலஜி என்ற நிறுவனம் உலகின் மிக உயரமான ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இருக்கிறது. இது தற்போது உலகிலேயே மிக உயரமான கட்டடமாக இருக்கும் துபாய் நாட்டின் புர்ஜ் காலிபா (830 மீ) வை விட 20 மடங்கு உயரமுள்ள டவராக இருக்கும். அதாவது கிட்டதட்ட 17 கி.மீ உயரத்தை கொண்டிருக்கும்.

இதன் மூலம் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் போது எரிபொருள் செலவு பெருமளவு குறையும். விண்வெளி வீரர்கள் லிப்ட் மூலமாக அதன் உச்சியை அடைந்து ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியும். இந்த ராக்கெட் ஏவுதளத்தின் உச்சியில் இருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் அவற்றின் பணி முடிந்ததும் டவரின் உச்சிக்கே திரும்ப வந்து எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும்.

ராக்கெட்டுகளை ஏவ மட்டுமில்லாமல், காற்றின் மூலம் மின்சார உற்பத்திக்கும், தகவல் தொடர்புக்கும் இந்த ஏவுதளம் உதவியாக இருக்கும் என தோத் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கரோலின் ராபர்ட்ஸ் தெரிவித்தார். இது எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்வெளி உபகரணங்கள் அனுப்புவதற்கும், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கும், விண்வெளி பயணத்திற்கும் உதவியாக இருக்கும் என அந்த நிறுவன தலைவர் மேலும் தெரிவித்தார்.

அமைக்கும் முயற்சியில் கனடா நாட்டின் நிறுவனம் ஒன்று இறங்கியுள்ளது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.