மெய்சூ ஸ்மார்ட்போன்

62201545418PM_635_meizu_m2_note

ஜியோமி, ஜியோனி வரிசையில் மேலும் ஒரு ஸ்மார்போன் சீனாவில் இருந்து இந்தியாவில் அறிமுகமாகிறது. சீனாவின் மெய்சூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் 18-ம் தேதி அறிமுகமாகிறது.
இந்தியா ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக வளரும் சந்தையாக இருப்பதால் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்ட்களை கவர்ந்து வருகிறது. சர்வதேச நிறுவனங்கள் தவிர சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், இந்தியாவில் தங்கள் போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக சீனாவின் ஜியோமி நிறுவனம் இந்தியாவில் சூறாவளியாக அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, மேலும் பல நிறுவனங்கள் இந்திய சந்தையில் கால் பதிக்க விரும்புகின்றன.
இந்த வரிசையில் சீனாவின் மெய்சூ இந்தியாவில் நுழைகிறது. இந்நிறுவனம் தனது மெய்சூ எம் 1 நோட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. வரும் 18-ம் தேதி இந்த போன் அறிமுகமாகும் என நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.