பதிய ஆன்டிராய்டு மார்சமல்லோ.

marshamallow

கூகுள் நிறுவனத்தின் புதிய இயங்குதளத்தின் பெயர் மார்ஷ்மல்லோ என அந்நிறுவனத்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. கூகுள் ஐஓ 2015 விழாவில் ஆண்ட்ராய்டு எம் என்பதை மட்டும் கூகுள் நிறுவனம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக மில்க்ஷேக், மஃப்பின் என பல பெயர்களை கடந்து விட்ட எதிர்பார்ப்பு பெயர்களுக்கு முற்று புள்ளி வைத்திருக்கின்றது கூகுள். புதிய அப்டேட் வழங்கப்பட்டிருப்பதை தொடர்ந்து கூகுளின் மவுன்டெயின் வியூ அலுவலகத்தில் ஆண்ட்ராய்டு கையில் மார்ஷ்மல்லோ இருப்பதை போன்ற சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை கூகுளின் ஜெஃப் ஷார்க்கி புகைப்படமாக வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. கூகுளின் புதிய மென்பொருளாக கருதப்படும் இந்த இயங்குதளம் ஆண்ட்ராய்டு 6.0 என்றும் கூறலாம். ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ அப்டேட் மூலம் மெமரி மேனேஜ்மென்ட், ஆப்ஸ், மற்றும் பேட்டரி சேமிக்கும் திறன் போன்றவை மேம்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.