10 வயது மகனை டிரக் ஓட்ட வைத்த குடிகார தந்தை கைது

How-to-drive-a-moving-truck

அமெரிக்காவில்,  ஒரு குடிகாரத் தந்தை,  தன்னுடைய 10 வயது மகனை கனரக டிரக் ஓட்ட வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சரகோட்டா பகுதியைச் சேர்ந்த ஜான் பார்லிங் என்பவர் போதையில்  நியூயார்க்கின் நெரிசல் மிகுந்த பாதையில், தனது பத்து வயது மகனை  டிரக்கை ஓட்டிவரச் சொல்லியிருக்கிறார். அந்த சாலையில் பயணித்தவர்கள் டிரக்கை ஓட்டிவந்த சிறுவனைப் பார்த்ததும், போலீஸுக்கு  தகவல் அளித்தனர்.

அந்த வாகனத்தை ஓட்டிவந்த சிறுவனை எச்சரித்த காவல்துறையினர், சிறுவனின் உறவினர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர். அதன் பின்னர், ஓட்டுனர் உரிமம் இல்லாமல், அந்த வாகனத்தை ஒரு சிறுவனை வைத்து ஓட்டி வரச் செய்த குற்றத்துக்காகவும், அவனது உயிருக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் ஜானை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.