மூதாட்டியை ஆபாசமாக திட்டிய கிளி – காவல்நிலையத்தில் புகார்

parrot

தினமும் ஒரு கிளி தன்னை ஆபாசமாக திட்டுவதாக 85 வயது மூதாட்டி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த விநோத சம்பவம், மாஹாராஸ்டிரத்தின் சந்தர்பூர் மாவட்டத்தில் ராஜுரா என்னும் இடத்தில் நடந்துள்ளது.  ஜனபாய் என்ற 85 வயது மூதாட்டி  கிளியின் பயிற்சியாளரான அவரது வளர்ப்பு மகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில்  தனது வளர்ப்பு மகன் வீட்டை கடக்கும் போது,  அந்த கிளி ஆபாச வார்த்தைகளால் அவரைத் திட்டுகிறதாம். கிளிக்கு இப்படி பயிற்சி கொடுத்து  தன்னை வேண்டுமென்றே திட்ட வைக்கிறார் என்றும் அந்த மூதாட்டி புகார் அளித்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரி, மூதாட்டி, வளர்ப்பு மகன் மற்றும் அந்த கிளி ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து (தீவிர!) விசாரணை நடத்தினார். அந்த கிளியை மூதாட்டியிடம் எடுத்துச் சென்று, அவரை எதேனும் திட்டுகிறதா என்று பார்த்தனர்.

இது பற்றி கருத்துக் கூறிய காவல் துறை ஆய்வாளர், அந்த மூதாட்டிக்கும் அவரது வளர்ப்பு மகனுக்கும் இடையே நில பிரச்சனை இருந்ததாகவும், காவல் நிலையத்தில் அந்த கிளி அப்படி எதும் திட்டவில்லை என்றும் கூறினார். கிளி செய்த குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அந்த கிளியை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது காவல் துறை.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.