கடலுக்கு அடியில் 10 ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்திர தூண்

10years

டெல் அவ்விவ் பல்கலைக்கழக புவி அறிவியல் துறையை சேர்ந்த ஆய்வாளர் ஜிவி பென் ஆவ்ரஹாம் , இத்தாலி தேசிய கடலியல் மற்றும் புவி புவி சோதனை  நிறுவன   ஆய்வாளர் ட்ரீஸ்ட்  ஆகியோர் தொல் பொருள் அறிவியல் இதழ் ஒன்றில் எழுதி இருப்பதாவது:-தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிசிலி கடற்கரை பகுதியில் கடலின் அடியில், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மர்மமான சிற்பங்கள் செதுக்கபட்ட மிகப்பெரிய பாறை  ஒன்றை கண்டு பிடித்து உள்ளனர்.இது மத்தியதரைக்கடல் பகுதியின் முந்தைய நாகரீகத்தின் புதிய தவகல்களை கொடுக்கும்.

இந்த பாறை இரண்டாக உடைந்து இருக்கிறது.3.2 அடி நீண்ட உருவமாக வழக்கத்திற்கு மாறான வடிவில் உள்ளது. அவைகளில் குறிபிட்ட  இடைவெளில் துளைகள் உள்ளது.இந்த மர்ம பொருள கடலின் 131 அடி ஆழத்தில் கிடந்தது.கிடந்த இடத்தின் பெயர்  பண்டெல்லிரா வெசிகா கரைபகுதியாகும். இந்த தீவு பகுதி வால்கானிக் தீவில் இருந்து 24 மைல் தூரத்தில் உள்ளது என கூறி உள்ளனர்.இது குறித்து அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஸ்காட் வேரிங் கூறும் போது

15 டன் எடை உள்ள இந்த பொருளில்  10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயந்திரங்களால் துளையிடபட்டது போல் உள்ளது. தொழில்நுடப திறன் மிகுந்த  சதுரவிடிவம் இடப்பட்டு உள்ளது. தூன் போன்ற இந்த பொருள் அட்லாண்டிஸ் நகரில் இருந்து வந்து இருக்கலாம்.10 ஆயிரம் வருடத்திற்கு முன் உள்ள மனிதர்கள் சிக்கலான கருவிகளை உருவாக்கும் திறன் பெற்று இருந்தனர். இப்போது உள்லது போல்  மின்சாரம்,  எரிவாயு இல்லாத ந்கால கட்டத்தில் 15 டன் எடை உள்ள   இது போல் நகரும் சுண்ணாம்பு தூண்அலை செய்வது என்பது மிகவும் கடினமாகவே இருக்க வேண்டும்.ஒருவேளை  அட்லாண்டிஸ தீவின் அருகில் அந்த அழிந்த வேற்று கிரக நகரம் இருந்து இருக்க வேண்டும்.என்று கூறினார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.