நெஸ்லே நிறுவனம் ரூ.640 கோடி நஷ்டஈடு தரணுமாம். சொல்கிறது மத்திய அரசு

Maggi4-600x314

புதுடெல்லி

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமான நச்சுப்பொருள் இருப்பதாக கூறி இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது நுகர்வோர் விவகார அமைச்சகம் நெஸ்லே இந்தியா நிறுவனம் மீது நுகர்வோர் கோர்ட்டான தேசிய நுகர்வோர் விவகார தீர்ப்பு ஆணையத்தில் ரூ.640 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகள், போலி லேபிள்கள் பயன்படுத்துதல், தவறான விளம்பரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் இந்திய நுகர்வோர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

நுகர்வோர் சட்டம் 12 (1டி) பிரிவின்கீழ் இந்த புகார் கூறப்பட்டுள்ளது. பொதுவாக நுகர்வோர் கோர்ட்டில் நுகர்வோர் தான் வழக்கு தொடுப்பார்கள். ஆனால் இந்த பிரிவின் கீழ் மத்திய, மாநில அரசுகளும் வழக்கு தொடுக்க முடியும். 30 வருடங்கள் பழமையான இந்த சட்டத்தில் இப்போது தான் முதல்முறையாக மத்திய அரசு வழக்கு தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.