ஏழு மாதங்களில் 41 புலிகளை காணவில்லை

tiger

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஏழு மாதங்களில் 41 புலிகளை இழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.இந்தியா முழுவதும் புலிகளை பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில்  ஜனவரி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரையிலான 7 மாதங்களில் 41 புலிகள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. புலிகள் இறப்பதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல், மலைப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள புலிக்கு விஷத்தை வைத்து விடுகின்றனர். மேலும் மனிதர்கள் பாதுகாப்பிற்காக புலிகள் சுட்டுகொள்ளபடுவதும் முக்கிய காரணம் என்று  தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.கர்நாடகம், மத்திய பிரதேசம், மராட்டியம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் புலிகளின் மரணங்கள்  எண்ணிக்கை அதிகபட்ச உள்ளதாக  தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.