6 வயது சிறுமியை கடித்துக்கொன்ற சிறுத்தை

A leopard runs to attack as Nepalese people run for cover at Gothatar, Katmandu, Nepal, Wednesday, April 10, 2013. According to reports, 15 people were injured including three policemen and two officials from the Department of Forest. The leopard was later killed with the help of Nepalese policemen and local media people. (AP Photo/Niranjan Shrestha)

மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக்கில் 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இங்குள்ள நிபாட் தாலுகாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி, நேற்று மாலை கைகழுவுவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, வீட்டை ஒட்டியுள்ள புதர் மறைவில் பதுங்கியிருந்த ஒரு சிறுத்தை அந்தச் சிறுமியின் கழுத்தைக் கவ்வியபடி, இழுத்துக் கொண்டு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதிக்குள் ஓடியது.

சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டினுள்ளே இருந்த அவளது பாட்டி வெளியே வந்து பார்த்துள்ளார். தனது பேத்தியை கவ்விக் கொண்டு சிறுத்தை ஓடுவதைக் கண்டு பதற்றத்தில் அவர் கூச்சல் எழுப்பினார். அவரது சப்தம் கேட்டு விரைந்துவந்த அக்கம்பக்கத்தினர், சத்தமிட்டபடி சிறுத்தையை விரட்டிக் கொண்டு காட்டுக்குள் ஓடினர்.

சற்று தூரத்தில் மயக்க நிலையில் கிடந்த சிறுமியைக் கடித்து தின்றுக் கொண்டிருந்த சிறுத்தையை அவர்கள் விரட்டி அடித்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தச் சிறுமியை மீட்டுவந்த கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.