முன்னேற்ற கவிதை

munnetram

அன்பை சுமந்தால்
அகிலம் பாரமில்லை

அழகாய் சிரித்தால்
ஆனந்தம் தூரமில்லை

துயரம் எதற்கு ?
தூக்கி போடுடா…..

துணிவே இருக்கு
தொடர்ந்து செல்லடா

விழிகளின் ஒளிகளில்
விடியட்டும் இரவுகள்

வினவிடும் கேள்வியில்
முடியட்டும் சிக்கல்கள்

மூளை இருந்தால்
மூலையில் பூ பூக்கும்

முடங்கிக் கிடக்காது – நீ
முன்னேறு தோழா……!

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.