முகப்பரு ப்ரச்சினையா?

pimples

முகப்பரு நீங்க பத்து யோசனைகள்.
1) ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை முகத்தைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
2) ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
3) பழங்கள், பழச்சாறு, காய்கறிகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.
4) எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும்.
5) எலுமிச்சைச் சாறுடன் சிறிது வெந்நீர் கலந்து முகம் கழுவலாம்
6) வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து அரைத்து முகத்தில் பூசலாம்.
7) ரோஜா இதழ்களைப் பொடித்து ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசலாம்
8) சந்தனத்தையும் சீரகத்தையும் சிறிதளவு அரைத்து முகத்தில் பூசலாம்.
9) படிகாரத்தைத் தண்ணீரில் கரைத்து அந்த நீரில் சந்தனத்தை அரைத்துப் பூசலாம்.
10) சாதிக்காய் சந்தனம் மிளகு மூன்றையும் சம அளவில் அரைத்துப் பூசலாம்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.