மாங்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள் :

1. பெரிய மாங்காய் – 4 (துண்டு துண்டாக நறுக்கியது)
2. மிளகாய்த் தூள் – 100 மில்லி கிராம்
3. பெருங்காயம் – 1 துண்டு
4. வெந்தயம் – 1 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
6. கடுகு – 1 தேக்கரண்டி
7. எண்ணெய் – 3 தேக்கரண்டி
8. உப்பு – 2 பிடி

செய்முறை விளக்கம் :

1. மாங்காயை கழுவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதை அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து கட்டி பெருங்காயத்தையும், வெந்தயத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து பொடித்து வைக்கவும்.

2. அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு காய்ந்ததும், கடுகைப் போட்டு தாளித்து, பின் நறுக்கிய மாங்காய்த் துண்டுகளைப் போட்டு வதக்கவும். சற்று நேரம் மாங்காயை வேக வைக்கவும்.

3. பிறகு மாங்காய் நன்றாக வெந்ததும், காரப் பொடி, தேவையான அளவு உப்பு, பொடித்து வைத்துள்ள பெருங்காய வெந்தயப் பொடியை போட்டு நன்றாகக் கலக்கி இறக்கினால் சுவையான மாங்காய் ஊறுகாய் தயார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.