மாங்காய் தொக்கு

download

தேவையான பொருட்கள் :

1. மாங்காய் – 2 பெரியது (துருவியது)
2. வற்றல் மிளகாய் – தேவைகேற்ப
3. பெருங்காயம் – 1 சிறு துண்டு
4. உப்பு – 1 தேக்கரண்டி
5. நல்லெண்ணெய் – ½ கப்
6. கடுகு – ½ தேக்கரண்டி
7. வறுத்த வெந்தயப் பொடி – ½ தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

செய்முறை விளக்கம் :

1. முதலில் வெறும் வாணலியில் மிளகாய் வற்றலை வறுத்துப் பொடித்து வைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.

2. இதனுடன் மாங்காய் துருவல், தேவையான அளவு உப்பு, வெந்தயப் பொடி மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். மாங்காய் துருவல் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள மிளகாய்ப் பொடி சேர்த்து மேலும் கொஞ்ச நேரம் வதக்கி இறக்கவும்.

3. இந்த மாங்காய் தொக்கு மிகவும் சுவையாக இருக்கும். இதை ஒரு சுத்தமான காற்று புகாத ஜாடியில் மூடி வைத்து பாதுகாத்தால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு உபயோகிக்கலாம்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.