இஞ்சி மிளகாய் ஊறுகாய்

Ginger Pickle

தேவையான பொருட்கள் :

1. பச்சை மிளகாய் – 250 கிராம் (நறுக்கியது)
2. இஞ்சி – 100 கிராம் (நறுக்கியது)
3. பெருங்காயம் – சிறிதளவு
4. மஞ்சள் – 1 தேக்கரண்டி
5. உப்பு – 5 தேக்கரண்டி
6. எண்ணெய் – 2 தேக்கரண்டி
7. கடுகுத் தூள் – 4 தேக்கரண்டி
8. எலுமிச்சை பழம் – 10

செய்முறை விளக்கம் :

1. இஞ்சியை கழுவி விட்டு தோல் சீவவும். பின்பு பொடியாக நறுக்கி விட்டு பச்சை மிளகாயையும் நறுக்கி, இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு உப்பு, மற்றும் மஞ்சள் தூளையும் நன்றாக கலந்து பிரட்டி வைக்கவும்.

2. பத்து எலுமிச்சம் பழங்களை இரண்டாக வெட்டி சாறு பிழிந்து, இஞ்சி, பச்சை மிளகாய் கலவையுடன் சேர்க்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், பெருங்காயம், கடுகுத் தூள் போட்டு தாளித்து அதனுடன் கலந்துவிட வேண்டும். சுவையான இஞ்சி மிளகாய் ஊறுகாய் தயார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.