மீன் தொக்கு

03-1443856333-nethilimeenthokku

தேவையான பொருட்கள் :

1. மீன் – ½ கிலோ
2. வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
3. தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
4. தனியா தூள் – 3 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
6. கடுகு – ½ தேக்கரண்டி
7. கருவேப்பிலை – சிறிதளவு
8. கொத்தமல்லி – சிறிதளவு
9. மிளகாய் வற்றல் – 2
10. பச்சை மிளகாய் – 2
11. உப்பு – தேவையான அளவு
12. புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
13. இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
14. மிளகு தூள் – 1 தேக்கரண்டி
15. மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
16. எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம் :

1. மீனை துண்டுகளாக்கி கழுவி சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை ஊற வைத்து கரைக்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும்.

2. தொக்கு செய்ய ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து தாளிக்கவும்.

3. பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டின் பச்சை வாசனை போனதும், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.

4. தக்காளி நன்கு மசிந்ததும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து பிரட்டவும். அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகுமளவிற்கு கொதிக்க வைக்கவும்.

5. இதனுடன் மீன் துண்டுகள் மற்றும் புளி கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து மீன் வெந்ததும் இறக்கிவிடலாம். சுவையான மீன் தொக்கு தயார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.