வெண்டைக்காய் தயிர்க்குழம்பு

vendaikar sambar

தேவையான பொருட்கள் :

1. வெண்டைக்காய் – சிறிது
2. வெங்காயம் – 1
3. மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
4. உப்பு – தேவையண அளவு
5. தயிர் – 1 ½ கப்

அரைக்க தேவையான பொருட்கள் :

1. பச்சரிசி – 2 தேக்கரண்டி
2. துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி
3. தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் – 3
5. சீரகம் – ½ தேக்கரண்டி

தாளிக்க தேவையான பொருட்கள் :

1. எண்ணெய் – 1 தேக்கரண்டி
2. கடலை பருப்பு – ¼ தேக்கரண்டி
3. கடுகு – ¼ தேக்கரண்டி
4. சீரகம் – ¼ தேக்கரண்டி
5. உளுந்து – ¼ தேக்கரண்டி

செய்முறை விளக்கம் :

1. பச்சரிசி, துவரம் பருப்பு, தேங்காய் துருவல், மிளகாய் வற்றல் மற்றும் சீரகம் ஆகியவற்றை ஊற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் அரை கப் தயிரை கடைந்து ½ கப் தண்ணீர் சேர்த்து மோர் ஆக்கவும். வெங்காயத்தை பொடியாகவும், வெண்டக்காயை ஓரளவு பெரியதாகவும் நறுக்கவும்.

2. ஒரு கடாய் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.

3. காய் வதங்கியதும், மோரில் அரைத்த மசாலாவை சேர்த்து தேவைக்கு ஏற்ப தண்ணீர், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். காய் வெந்தவுடன் இறக்கி விடலாம். குழம்பு கொஞ்ச நேரம் ஆறியதும், மீதி இருக்கும் ஒரு கப் தயிரை சேர்த்து கலக்கவும். சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு சாப்பிட தயார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.