இறால் சாம்பார்

prawn

தேவையான பொருட்கள் :

1. இறால் – ¼ கிலோ
2. துவரம் பருப்பு வேக வைத்தது – 1 கப்
3. சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
4. பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
5. தக்காளி – 1 (நறுக்கியது)
6. இஞ்சி – 1 துண்டு
7. பூண்டு – 4 பற்கள்
8. கடுகு – 1 கரண்டி
9. வரமிளகாய் – 3
10. மிளகுத் தூள் – 1 கரண்டி
11. மஞ்சள் தூள் – 1 கரண்டி
12. மல்லித் தூள் – ½ கரண்டி
13. தேங்காய்ப் பால் – 1 கப்
14. மல்லி இலை – சிறிதளவு
15. தேங்காய் எண்ணெய் – 2 கரண்டி
16. கறிவேப்பிலை – 10 இலை
17. உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை விளக்கம் :

1. இறாலை ஓடு நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். துவரம் பருப்பை குக்கரில் வேக வைக்கவும். வெங்காயம் தக்காளியை நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

2. பிறகு வர மிளகாயும் போட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும். அதிலே நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் சிவக்க மாறும் வரை வதக்கவும்.

3. கலவை நன்றாக வதங்கியதும், பிறகு அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து இதனுடன் இறாலை சேர்த்ததும் ஒரு வதக்கு வதக்கவும். பின்பு இதிலே தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

4. சுவைக்கேற்ப உப்பு கலந்து, நன்றாக கொதிக்கும் போது, அதில் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து மேலும் கொதிக்க ஐந்து நிமிடத்திற்கு விடுங்கள். பிறகு கொத்தமல்லி இலையை தூவி விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.