ஈஸி வெஜிடபிள் கொஸ்த்

bone sambar

தேவையான பொருட்கள் :

1. பச்சை மிளகாய் – 2
2. தக்காளி – 3
3. கேரட் – 1 (துருவியது)
4. உருளைக் கிழங்கு – 1 (துருவியது)
5. கத்தரிக்காய் – 2 (பொடியாக நறுக்கியது)
6. பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
7. முட்டைக்கோஸ் – ½ கப் (நறுக்கியது)
8. கடுகு – ஒரு தேக்கரண்டி
9. சாம்பார் பொடி – ஒரு தேக்கரண்டி
10. உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
11. தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
12. பாசிப் பருப்பு – ½ கப்
13. கறிவேப்பிலை – சிறிதளவு
14. கொத்தமல்லி தலை – சிறிதளவு
15. உப்பு – தேவையான அளவு
16. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை விளக்கம் :

1. பாசிப்பருப்பை கழுவிக் கொண்டு, மஞ்சள் பொடி, துருவிய கேரட், உருளைக்கிழங்கு, நறுக்கிய முட்டைக்கோஸ், கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகிய எல்லாவற்றையும் குக்கரில் போட்டு நான்கு கப் தண்ணீர் சேர்க்கவும்.

2. பிறகு குக்கரை அடுப்பில் வைத்து ஐந்து விசில் வரை வேக வைக்கவும். குக்கரை இறக்கி பிரஷர் இறங்கியதும் ஆற வைக்கவும். பின்னர் குக்கரை திறந்து மத்தால் மசித்து விடவும்.

3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும். கொஸ்த்தை வாணலியில் ஊற்றி ஒரு கொதி கொதிக்க விடவும். கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் வெஜிடபுள் கொஸ்த் சுவையாக இருக்கும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.