எலும்பு சாம்பார்

bone sambar

தேவையான பொருட்கள் :

1. நெஞ்சு எலும்பு – 200 கிராம் (வேக வைத்தது)
2. வெங்காயம் – சிறிதளவு
3. பச்சை மிளகாய் – 6 (கீறியது)
4. பூண்டு – 6 (நறுக்கியது)
5. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
6. சாம்பார் பொடி – 1 கரண்டி
7. துவரம் பருப்பு – 100 கிராம்
8. உப்பு – தேவையான அளவு
9. எண்ணெய் – இரண்டு கரண்டி

செய்முறை விளக்கம் :

1. துவரம் பருப்பை சற்று நேரம் ஊற வைத்து ஒரு பாத்திரத்திலோ அல்லது குக்கரிலோ பருப்பை போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கடைந்து வைக்கவும்.

2. நெஞ்சு எலும்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து தனியாக வேக வைக்கவும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் அரிந்து வைக்கவும். சாம்பார் வைக்க ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், இரண்டு கரண்டி எண்ணெயை ஊற்றவும்.

3. எண்ணெயை காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வெந்த எலும்பையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான எலும்பு சாம்பார் தயார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.