நகை வாங்கும்போது கவனிக்க

jewel

தங்க நகை வாங்கும் போது கவனிக்க வேண்டிய தரம் மற்றும் சேதாரம் பற்றிய விழிப்புணர்வு குறித்து அன்னை ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாம் ஒவ்வொரு முறை தங்க நகை வாங்கும் போதும் கூடவே மனதுக்குள் லேசான பயமும் நிழலாடத்தான் செய்கிறது. காரணம் ஏமாந்து விடுவோமோ என்பதே! அதை விட, செய்கூலி, சேதாரம் குறித்தும் பல சந்தேகங்கள் நமக்கு ஏற்படும்.

தரம்

24CT என்பது 100% சுத்தமான தங்கம் ஆகும். 24CT தங்கத்தில் நகை செய்ய முடியாது. ஏனென்றால் 24CT தங்கம் எளிதில் வளையக்கூடிய தன்மை பெற்று (Flexbility) இருப்பதால், சரியான அளவில் செம்பு சேர்த்து 22CT தங்கமாக மாற்றப்படுகிறது. 22CT என்பது 91.6% தங்கமும் 8.4% செம்பும் சேர்ந்த கலவையாகும். இந்த 22CT தங்கத்தில்தான் உறுதியான ஆபரணங்கள் செய்ய முடியும்.

தங்கம் ஆபரணமாக உருவாக்கப்படும் போது பற்றவைப்பு மிக அவசியம். அவ்வாறு தங்கத்தை ஒன்றோடு ஒன்று பற்ற வைக்கப் “பொடி” என்ற உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது. முன்பு தங்கத்தைப் பற்ற வைக்க சாதாரணப் பொடி (Non KDM) பயன்படுத்தினர். Non KDM என்பது தங்கம், செம்பு, வெள்ளி, கலந்த பொடி. இந்தப் பொடியை வைத்துப் பற்ற வைக்கும் பொழுது இணைப்பில் சேர்ந்து விடுகிறது.

இந்த முறையில் தயாராகும் 22CT தங்க நகைகள் உருகும் நிலையில் 20CT அல்லது 21CT ஆக தரம் குறைந்து விடும். எனவே மறுமதிப்பு (Resale value) மார்க்கெட் விலையில் இருந்து சிறிது குறையும். Non KDM முறையில் தயாராகும் நகைகள் Hallmark –ல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. Non KDM முறையில் செய்யும் நகைகளுக்குச் சேதாரம் குறைவு.எனவே தங்கத்தின் தரம் குறையாமல் இருக்க, இப்பொழுது KDM என்ற பொடி பயன்படுத்தப்படுகிறது. KDM பொடி வைத்துத் தங்க நகை பற்ற வைக்கும் போது வெப்பத்தில் ஆவியாவதால் தங்கத்தின் தரம் மாறாமல் அப்படியே இருக்கிறது. அதாவது உருகும் நிலையிலும் 22CT ஆக இருக்கும். மறுமதிப்பும் மாறாமல் இருக்கும்.

தங்க நகையை வாங்கும் போது மக்கள் தரத்தில் ஏமாறாமல் இருப்பதற்காக நமது இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே “ஹால்மார்க்” ஆகும். ஹால்மார்க் முத்திரையிட்ட தங்கத்தை வாங்கும் போது 22CT தரத்தில் துளி அளவு கூட மாற்றுக் குறையாதது என்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த வகையில்,தென்மாவட்டத்திலேயே முதன் முறையாக 22CT தர உத்திரவாதத்திற்கு இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் BIS (Bureau of Indian Standards) ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற நிறுவனம்(License No.: CM/L-6316158 as per IS:01417:1999) அன்னை ஜுவல்லர்ஸ் ஆகும்.

தென்தமிழகத்தில் முதல் முறையாக வெள்ளியிலும் BIS ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ; (License No. : CM/L – 3328352 as per IS:2112:2003) அன்னை ஜுவல்லர்ஸ் ஆகும்.எனவே – செய்கூலி, இல்லை; சேதாரம் இல்லை அல்லது மிக மிகக் குறைவு என்றால் தங்கத்தின் தரத்தில் குறைவு இருப்பதற்கு உறுதியாக வாய்ப்பு உண்டு. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு தங்கநகை வாங்குங்கள் தரத்தில் சமரசம் (compromise) செய்து கொள்ளாத அன்னை ஜுவல்லர்ஸில் தங்கநகை வாங்குங்கள் ஆதாயமும், நிம்மதியும் பெற்று ஆனந்தம் அடையுங்கள்.

22CT ஹால்மார்க் உத்திரவாதத்துடன் தங்கம்

22CT ஹால்மார்க் உத்திரவாதத்துடன் தங்கம் ஆபரணமாகச் செய்து வரும் போது உண்டாகும் சேதாரம் மற்றும் கூலி (தயாரிப்புச் செலவுகள்) பற்றிய விளக்கம்: தங்கத்தை ஆபரணமாகச் செய்வதற்குச் செய்கூலி என்பது நியாயமானது. வெறும் தங்கத் துகள்களாக, தங்கக் கட்டிகளாக இருப்பதை நமக்குப் பிடித்த நகைகளாக வடிவமைப்பதற்குத் தயாரிப்புச் செலவு என்பது தவிர்க்க முடியாது. இதைத்தான் நாம் செய்கூலி, சேதாரம் என்று நடைமுறையில் கூறுகிறோம். இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தங்கத்தை முதல்நிலையில் உருக்கி எடை போட்டாலே சிறிதளவு சேதாரம் ஏற்படும். தங்கம் ஆபரணமாக முழுமை பெற்று வரும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சதவிகித சேதாரம் தவிர்க்க முடியாதது. தங்கம் நகையாக உருவாக்கப்படும் போது வடிவமைத்தல், உருவம் கொடுத்தல், கல் வைத்தல், மோல்டிங் செய்தல், செதுக்கல், பட்டைவெட்டுதல், மெருகேற்றுதல் எனப் பல நிலைகளில் பல்வேறு தங்க நகைக் கைவினைஞர்களின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.தங்க நகைகள் அதிகமாகத் தயார் செய்யும் இடங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, கோவை, திருச்சூர். இவ்வாறு தயாரிக்கப்படும் நகைகளின் நேரம், அதன் தன்மை, நுணுக்கமான வேலைப்பாடுகளின் வித்தியாசத்தைப் பொறுத்துச் சேதாரம் வேறுபடும்.

தங்கத்தை ஆபரணமாக உருவாக்கும் போது நாள் கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில் தயாராகும் நகைகளின் கலைநயமான வேலைப்பாட்டை பொறுத்தும், நகை செய்யும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த தங்க நகைத் தயாரிப்பு இயந்திரங்கள் மூலம் தயாராகும் தங்க நகைகளைப் பொறுத்தும் சேதாரம் மற்றும் கூலி நிர்ணயிக்கப்படுகிறது.

உதாரணமாக ஒரு தங்க நாணயம் செய்வதற்குக் கூடச் சேதாரம் ஏற்படும். கூலி, சேதாரம் (தயாரிப்புச் செலவு) இல்லாமல் தங்க நகை தயாரிப்பு என்பது சாத்தியமே கிடையாது. தங்க கிரயம் மட்டும் கணக்குப் பார்த்தால் தங்க நகை வாங்க முடியாது. தங்கக் கட்டி மட்டுமே வாங்க முடியும்.மார்க்கெட் விலைக் குறைப்பு, சேதாரம் குறைவு, செய்கூலி இல்லை என்கின்ற விளம்பரத்தந்திரங்களைப் பயன்படுத்தாமல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி நேர்மையாக வணிகம் செய்வதே அன்னை ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நோக்கம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.