இந்தியாவின் விளையாட்டு

OLYMPISCHE SPELEN; SYDNEY 2000 18 SEPTEMBER 2000 HOCKEY; NEDERLAND-MAS 
hockeystick, bal
Copyright: Soenar Chamid

இந்தியா- பாகிஸ்தானைச் சேர்ந்த 22 வீரர்கள் வாழ்வா சாவா போராட்டத்தில் இருந்தனர், அந்த 22 வீரர்களின் பல வருடக் கனவு , போராட்டம், அர்ப்பணிப்பு அனைத்தையும் மட்டைகளின் லட்சிய வேகத்தில் பறந்த பந்துகள் மட்டுமே அறியும். பதற்றம் ,பயம் அனைத்தையும் லட்சிய பிடிகள் தகர்த்தன, விடாமுயற்சி, குழு செயல்பாடு, சாதுர்யம் எல்லாம் களத்தில் நர்த்தனம் ஆடின. இறுதியில் இதோ அந்தத் தருணம் வந்தது, பதற்ற மூச்சுகள் நிம்மதி பெரு மூச்சுகளாயின, அனல் பறந்த கண்களில் ஆனந்த கண்னீர் ததும்பியது. லட்சியமே சுவாசமாய் வாழும் அந்த வீரர்களுக்கு லட்சியம் வெற்றியடையும் தருணம் என்பது வாழ்வின் உச்ச மகிழ்ச்சி அல்லவா, வந்தே விட்டது அந்த தருணம். இறுதியில் இந்திய அணி வீரர்கள் வெற்றி பெற்று, இந்திய அணியை வெற்றி அணி ஆக்குகின்றனர். இனி என்ன. குவியப்போகிறது பாராட்டுகள், பரிசுகள், ஆர்ப்பாட்டங்கள், வருமான வேட்டைகள் என்ற இயல்பான கனவோடு தான் தாயகம் திரும்பினர் அந்த வீரர்கள், ஆனால் நம்புங்கள் அவர்களுக்கு வரவேற்பு இல்லை, பாராட்டுகள் இல்லை பரிசுகள் இல்லை.
ஆம். அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் அல்லவே , அவர்கள் கேவலம் ஹாக்கி வீரர்கள் தானே. கடந்த செப்டம்பர் 11 அன்று ‘ஆசிய கோப்பை’ இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன்’ பட்டத்தை வென்று வந்த இந்திய ஹாக்கி வீரர்களுக்குத்தான் இந்த நிலை அவர்களுக்கு பரிசாக ’ஹாக்கி இந்தியா’ வாரியம் அறிவித்துள்ள தொகை வெறும் 25,000 தான். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு கோடி கோடியாய் வாரியிரைத்ததாலோ என்னவோ பாவம் ஹாக்கி வீரர்களை ஊக்குவிக்க பணமில்லை ! இந்திய ஹாக்கி வீரர்களும் ஹாக்கி இந்தியா’ வாரியத்தின் வறுமை நிலையை கருதி அதனை வாங்க மறுத்தும் உள்ளனர்
ஹாக்கி இந்தியா’ வாரியத்தின் இந்த நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளின் நிலை எவ்வளவு இருளில் இருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது,

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.