ராகுல் டிராவிட் ஸ்பீச்

dravid

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால் ஐபிஎல்-லில் விளையாட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த அணி வீரர்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளது என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இந்தியா “ஏ”” அணியின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டிடம் சமீபத்தில் வெளிவந்த ஐபிஎல் சூதாட்ட தீர்ப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதுகுறித்து டிராவிட் கூறுகையில், ஐபிஎல் தொடரில் அரங்கேறிய சம்பவங்கள் வீரர்களுக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறான செயல்கள் பல வீரர்களை பாதித்துள்ளது. இதுபோன்ற ஒரு தீர்ப்பு அணியில் உள்ள வீரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்றார்.

இதனால் இளம் வீரர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நட்சத்திர வீரர்களை வேறு அணிகள் ஏலத்தில் எடுத்து கொள்ளும். எனினும் ஆர்.எம். லோதா குழுவின் தீர்ப்பை மதிக்கிறேன் என்றார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.